×

தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் 5 நாட்களில் 4,479 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி தீவிர நடவடிக்கை

சென்னை: தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் கடந்த 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை 4,479 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் இயற்கை உரமாகவும் மற்றும் உயிரி எரிவாயுவாகவும், மக்காத குப்பைகள் மறுஉபயோகத்திற்கும், மறுசுழற்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தூய்மைப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் மாநகராட்சியின் சார்பில் தீவிர தூய்மைப் பணியானது தொடர்ந்து 10 நாட்கள் மேற்கொள்ளப்பட்டு நீண்ட நாட்களாக தேங்கியிருந்த 3,260 மெட்ரிக் டன் குப்பைகள், 10,085 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் என மொத்தம் 13,345 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டன.  மாநகராட்சி பகுதிகளில், நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்ற மாதந்தோறும் ஒரு வாரக்காலத்திற்கு தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கடந்த ஜூன் மாதம் ஒரு வாரக் காலத்திற்கு தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு 2,000 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் 6,700 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் என மொத்தம் 8,700 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டன.

தற்பொழுது ஜூலை மாதத்தில் கடந்த 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை 407 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு 1,122 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் 3,357 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் என மொத்தம் 4,479 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.  
மேலும்,பொது இடங்களை தூய்மைப்படுத்தி மாநகரின் அழகை பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பொது இடங்கள், அரசு கட்டிடங்கள், பாலங்கள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் ஏற்கனவே அகற்றப்பட்டு வருகின்றன.

தற்பொழுது பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றும் வகையில் நேற்று ஒருநாள் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தூய்மை பணியாளர்கள், சாலைப்பணியாளர்களை கொண்டு சுவரொட்டிகள் அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Tags : Cleaning work, solid waste, corporation, action
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...